பாகிஸ்தானுக்கு 2வது வெற்றி

ஷார்ஜா: நியூசிலாந்து அணியுடனான ஐசிசி உலக கோப்பை சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஷார்ஜாவில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச... நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்தது. கப்தில் 17 ரன், மிட்செல் 25 ரன், கேப்டன் வில்லியம்சன் 25 ரன், கான்வே 27 ரன், பிலிப்ஸ் 13 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். பாக். பந்துவீச்சில் ஹரிஸ் ராவுப் 4, அப்ரிடி, இமத், ஹபீஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.  

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து வென்றது. முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 33 ரன் (34 பந்து, 4 பவுண்டரி) விளாசினார். ஆசிப் அலி 27 ரன், ஷோகைப் மாலிக் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. பந்துவீச்சில் இஷ் சோதி 2 விக்கெட், சாண்டர், டிம் சூதி,டிரெண்ட் பவுல்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், அடுத்து நியூசி.யை வீழ்த்தி பிரிவு 2ல் 4 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

Related Stories:

More
>