குடியாத்தம், பள்ளிகொண்டாவில் 2 முறை நில அதிர்வு

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை, அக்ராகரம், பெரும்பாடி, மூங்கப்பட்டு,  மீனூர் மலை, கொல்லைமேடு, பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு 7.30 மற்றும் 10.25 மணி என 2 முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் 5 நொடி முதல் 10 நொடிகள் நில அதிர்வு நீடித்ததாக கூறப்படுகிறது. நில அதிர்வு காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் உருண்டோடின. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்தனர். இரவு 7.30 மணியளவில் லேசான அதிர்வு இருந்ததாகவும், இரவு 10.25 மணியளவில் வந்த அதிர்வு சற்று அதிகமாக இருந்ததாகவும் கிராம மக்கள் கூறினர்.

Related Stories:

More
>