பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள் பரோல் நீட்டிப்பு

ஜோலார்பேட்டை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக பரோல் வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் தாயார் அற்புதம்மாளுடன் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மே 28ம் தேதி முதல் 5 முறை அதாவது ஒவ்வொரு முறையும் 30 நாட்கள் கூடுதலாக பரோல் வழங்கப்பட்டது. இதனால், 150 நாட்கள் பேரறிவாளன் பரோலில் இருந்தார். இந்நிலையில், பேரறிவாளனின் பரோல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, மீண்டும் பேரறிவாளன் தரப்பில் 6வது முறையாக வைக்கப்பட்ட கோரிக்கையின்படி மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

Related Stories:

More
>