ஒகேனக்கல்லுக்கு 40 ஆயிரம் கனஅடி நீர்வரத்து

மேட்டூர்: கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மீண்டும் மழை வலுத்துள்ளதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 20,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 40,000 கனஅடியாக அதிகரித்தது. நீர்வரத்து அதிகாரிப்பால், மெயின் அருவி மற்றும் சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 21,390 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 27,251 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மள மளவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 101.05 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று மாலை 104 அடியை எட்டியது. நீர் இருப்பு 68.50 டிஎம்சி.

Related Stories: