தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பஸ்களில் முன்பதிவு 35,000 தாண்டியது: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதாவது, வரும் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 3,506 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக சென்னையிலிருந்து 9,806 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,540 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல் தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக 5ம் தேதி முதல் 8ம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,319 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,000 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,719 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

மேலும் இந்த பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ளும் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில்- 10 முன்பதிவு மையங்கள்; தாம்பரம் சானடோரியம்-2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 12 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர முன் பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.tnstc.in, tnstc official app மற்றும் தனியார் செயலிகளின் மூலமாகவும் முன்பதிவு  செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர். நேற்று வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

More
>