மத்திய அரசு பணி தேர்வு.! நாளை முதல் இலவச பயிற்சி வகுப்புகள்: வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குனர் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.எஸ்.சி, சிஜிஎல் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை, தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 28ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு  தொடங்கி நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் எஸ்.எஸ்.சி., சிஜிஎல் வகுப்பிற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

எனவே, பயிற்சி வகுப்பில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்கள் பெயர் மற்றும் கல்வித்தகுதியினை குறிப்பிட்டு peeo.chn@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 94999 66028 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் அனுப்பி பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையலாம். மேலும் அரசு வழிகாட்டுதலின்படி பயிற்சியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொண்டு பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: