பலவீனமான அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜ முயற்சி: பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

தஞ்சை: தஞ்சையில் தமிழ்நாடு மாநில சிறுபான்மை நலவாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நேற்று அளித்த பேட்டி: தமிழக ஆளுநர் ஒவ்வொரு துறை அதிகாரிகளின் தகவலும் கேட்டிருப்பதை ஏற்க முடியாது. ஆளுநரின் அதிகாரத்தை, தமிழக முதல்வர் மதிக்க தயாராக இருக்கிறார். ஆனால் ஒன்றிய அரசு, ஆளுநர் மூலம் வரம்பு மீறி செயல்பட்டால் ஏற்க முடியாது. சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவது மக்களிடையே இரட்டை ஆட்சி நடக்கின்றது என்ற குழப்பத்தை ஏற்படுத்தும். தமிழக அரசு மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசாக இருக்கிறது. ஆளுநரின் தலையீடு தேவையற்றது. அதிமுக தொடர்ந்து பலவீனமாகி வருவதால் அதனுடைய இடத்தை கபளீகரம் செய்து பாஜக தமிழகத்தில் தங்களை ஒரு எதிர்க்கட்சியாக நிலைநிறுத்தி கொள்ள நினைக்கிறது. இதனால் பொது மக்களின் கவனத்தையும் திசை திருப்பி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>