திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில் ஆண்டுதோறும் விளையாட்டு மற்றும் விஞ்ஞானம் உள்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை அழைத்து மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் `டேர் டு ட்ரீம்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தி வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் விஷ்ணுச்சரண் தலைமை வகித்தார். இயக்குனர் பரணிதரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஐரின் குமாரி, துணை முதல்வர் கவிதா கந்தசாமி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

இதில் இந்த ஆண்டு நடந்த முடிந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டரில் தங்கப் பதக்கமும், 50 மீட்டரில் வெண்கலப் பதக்கமும் வென்ற தங்கமங்கை அவ்னி லெகாரா, உயரம் தாண்டுதலில்  வெண்கலப் பதக்கம் வென்ற சரத்குமார், வில்வித்தையில் வெண்கலப் பதக்கம் வென்ற அர்விந்தர் சிங் ஆகியோர்  மாணவர்களுடன் கலந்துரையாடினர். இந்நிகழ்ச்சியில் இந்திய பாரா ஒலிம்பிக் தலைமை அலுவலர் ராகுல் சாமி, தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் பொதுச் செயலாளர் கிருபாகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: