திருவேற்காடு கோயிலில் விழிப்புணர்வு பிரசாரம்

பூந்தமல்லி: விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் பூந்தமல்லி தீயணைப்பு துறையின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் வளாகத்தில் பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நேற்று நடத்தினர். பூந்தமல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால், சிறப்பு அலுவலர் இளங்கோவன் தலைமையில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் இணை ஆணையர் லட்சுமணன் முன்னிலையில், கோயிலுக்கு வந்த பக்தர்கள், கோயில் பணியாளர்களிடம் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். இதில் பாதுகாப்பாக விபத்தில்லாமல் பட்டாசு வெடிப்பது எப்படி, பட்டாசு வெடிக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து எப்படி பாதுகாத்து கொள்வது, தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து செய்து காட்டினர்.

Related Stories:

More
>