வேலை செய்ய முடியல... 5 சிபிஐ அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வு

புதுடெல்லி: அலுவலக திறன் செயல்பாடுகள் குறைவு காரணமாக, 5 சிபிஐ அதிகாரிகள், மூத்த வழக்கறிஞருக்கு ஒன்றிய அரசு கட்டாய பணி ஓய்வு அளித்துள்ளது. அடிப்படை விதிகள் 1972 பிரிவு 56(ஜே)யின் கீழ் பொது நலன் கருதி எந்த ஒரு அரசு ஊழியருக்கும் கட்டாய ஓய்வு அளிப்பதற்கு ஒன்றிய அரசுக்கு முழு உரிமை இருக்கின்றது. அரசு ஊழியரின் வயது, சேவையின் அளவுகோல்களை பூர்த்தி செய்தல் மற்றும் பொதுநலன் கருதி மூன்று மாதங்களுக்கு குறையாத எழுத்து மூலமான அறிவிப்பின் மூலமாகவோ அல்லது அறிவிப்புக்கு பதிலாக மூன்று மாத ஊதியம் மற்றும் படிகள் உள்ளிட்டவற்றுடன் கட்டாய பணி ஓய்வு அளிப்பதற்கும் உரிமை இருக்கின்றது. இந்த விதியை பயன்படுத்தியும் பொது நலன் கருதியும், 5 சிபிஐ அதிகாரிகள் மற்றும் ஒரு மூத்த வழக்கறிஞருக்கு ஒன்றிய அரசு கட்டாய பணி ஓய்வு அளித்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

Related Stories: