பாகிஸ்தானிடம் நியூசிலாந்து திணறல்

ஷார்ஜா: பாகிஸ்தான் அணியுடனான ஐசிசி உலக கோப்பை சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. ஷார்ஜாவில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசியது. மார்டின் கப்தில் - டாரில் மிட்செல் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்தனர். கப்தில் 17 ரன், மிட்செல் 25 ரன் எடுத்து வெளியேற, நீஷம் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். நியூசி. 56 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. கேப்டன் வில்லியம்சன் - டிவோன் கான்வே ஜோடி 4வது விக்கெட்டுக்கு 34 ரன் சேர்த்தது. வில்லியம்சன் 25 ரன் எடுத்து ரன் அவுட்டாக, கான்வே 27 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். பிலிப்ஸ் 13, செய்பெர்ட் 8, சான்ட்னர் 6 ரன்னில் அவுட்டாகினர். நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்தது. ஈஷ் சோதி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாக். பந்துவீச்சில் ஹரிஸ் ராவுப் 4, அப்ரிடி, இமத், ஹபீஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.    

Related Stories:

More
>