நேருக்கு நேர்...

* இங்கிலாந்து-வங்கதேசம்

இரு அணிகளும் இதுவரை இருதரப்பு சர்வதேச டி20 தொடர்களில் விளையாடியதில்லை. இந்த மாதம் நடைபெறுவதாக இருந்த தொடர் ஐபிஎல், உலக கோப்பை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பையில் மட்டுமே இந்த அணிகள் மோதியுள்ளன. டி20 உலக கோப்பையில்... 4 முறை மோதியுள்ளதில் இரு அணிகளும்  தலா 2 வெற்றிகளை பெற்று சமநிலையில் உள்ளன. இந்த ஆட்டங்களில்  இங்கிலாந்து அதிகபட்சமாக 386 ரன், வங்கதேசம் 280 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக இங்கிலாந்து 147 ரன்னிலும், வங்கதேசம் 143 ரன்னிலும் சுருண்டுள்ளன.

* ஸ்காட்லாந்து-நமீபியா

சர்வதேச டி20ல் இரு அணிகளும் 8 முறை மோதியுள்ளதில், தலா  4 ஆட்டங்களில் வெற்றி வாகை சூடியுள்ளன. அந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக ஸ்கா்லாந்து  230 ரன், நமீபியா 223 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக நமீபியா 159 ரன்னிலும், ஸ்காட்லாந்து 137 ரன்னிலும் சுருண்டுள்ளன. டி20 உலக கோப்பையில், நமீபியா முதல் முறையாக விளையாட உள்ளது. இன்று இரவு நடைபெற உள்ள ஆட்டம் தான், நமீபியா  உலக  கோப்பை ஒன்றில் ஆடும் முதல் ஆட்டமாகும்.

Related Stories: