நவ.5ல் கேதர்நாத் செல்கிறார் மோடி

டேராடூன்: உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத்துக்கு பிரதமர் மோடி நவம்பர் 5ம் தேதி செல்ல இருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி கடந்த 7ம் தேதி தொடங்கி வைத்தார். இம்மாநிலத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்றான கேதர்நாத்துக்கு அவர் அடுத்த மாதம் செல்கிறார். இது குறித்து இம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று கூறுகையில், ``ரூ.400 கோடி மதிப்பிலான கேதர்புரி சீரமைப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நவம்பர் 5ம் தேதி இங்கு வர இருக்கிறார். மேலும், அவர் ஆதி குரு சங்கராச்சார்யா சிலையை திறந்து வைக்க உள்ளார்,’’ என்றார். குளிர்காலம் தொடங்குவதால் கேதர்நாத் தலங்கள் வரும் 6ம் தேதியுடன் மூடப்படும் என்பதால் பிரதமர் மோடி அதற்கு முன்பு செல்ல இருக்கிறார். ஒரு மாத இடைவெளியில் கேதர்நாத்துக்கு மோடி செல்வது இது 2வது முறை.

Related Stories:

More
>