கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு: தீயை அணைக்கும் பணி தீவிரம்..!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முருகன் என்பவருக்கு சொந்தமான கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள கடைகளிலும் பரவியதால் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சங்கராபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற்னர். 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் பலர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அச்சம் நிலவி வருகிறது. மேலும் இதனிடையே பட்டாசு கடையின் அருகே உள்ள பேக்கரியில் இருந்து தீப்பொறி பரவி விபத்து ஏற்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories:

More
>