அமராவதி ஆற்றிலுள்ள முதல் ஆறு பழைய ராஜவாய்க்கால்களுக்கு நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

சென்னை: அமராவதி ஆற்றிலுள்ள முதல் ஆறு பழைய ராஜவாய்க்கால்களுக்கு நாளை முதல் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றிலுள்ள முதல் ஆறு பழைய இராஜவாய்க்கால்களுக்கு (குமரலிங்கம், சர்க்கார்கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) இரண்டாம் போக பாசனத்திற்காக அமராவதி ஆற்று மதகு வழியாக 1404.00 மி.க.அடிக்கு  மிகாமல் 27.10.2021 முதல் 23.02.2022 வரை 120 நாட்களில் (நாளொன்றுக்கு 250 கன அடி வீதம்  65  நாட்கள் தண்ணீர் திறப்பு - 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு) தகுந்த இடைவெளி விட்டு, அமராவதி  அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்தில் 4686 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: