மருதுபாண்டியர் குருபூஜை, தேவர் ஜெயந்தி : அக்டோபர் 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை : மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜைக்காக அக்டோபர் 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகின்ற 28, 29, 30 தேதிகளில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருக்கிறார். வரும் 27ம் தேதி காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் கூறியதாவது: “அக்டோபர் 27ம் தேதி காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்புத்தூர் ஒன்றியத்திற்குள் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.அதேபோல், அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம் சிவகங்கை, திருப்புவனம், காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது” என்றார்.

Related Stories:

More
>