தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா ? : 23 எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு செய்யாமல் பயணிக்கலாம்

சென்னை : ”நவம்பர் 1ம் தேதி முதல் ரயில்களில் மீண்டும் முன்பதிவின்றி பயணிக்கலாம்” என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்மூலம், கொரோனா காரணமாக முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்பட உள்ளது. 23 ரயில்களில் முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் பழைய முறைப்படி முன்பதிவின்றி பயணிக்கலாம்.

கோவை - நாகர்கோவில் , திருச்சி - திருவனந்தபுரம் இடையேயான ரயில்களிலும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்பட உள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

More
>