முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஒன்றிய நீர்வள ஆணையர் தலைமையில் ஆலோசனை!: தமிழ்நாடு, கேரள அதிகாரிகள் பங்கேற்பு..!!

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஒன்றிய நீர்வள ஆணைய ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கக் கோரி ஜோ. ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக மேற்பார்வைக்குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணை தொடர்பான ஒன்றிய நீர்வள ஆணைய ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. ஒன்றிய நீர்வள ஆணையர் எஸ்.கே.ஹல்டர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அதிகாரிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சத்சேனா, கேரள பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் பெறப்படும் இரு மாநிலங்களின் கருத்துக்களின் அடிப்படையில் நீர்வள ஆணையம் அறிக்கை தயாரித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: