இந்தியாவில் முக்கிய தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு வழக்கு!: சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு..!!

டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த நிபுணர் குழு அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. இஸ்ரேலின் பெகாசஸ் செயலி மூலம் இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுகேட்கப்பட்ட போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த ஒரு குழு அமைக்க உத்தரவிடக்கோரி மூத்த பத்திரிகையாளர்கள், வழங்கறிஞர்கள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த செப்டம்பர் 13ம் தேதி நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா  அமர்வு நாளை தீர்ப்பு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெகாசஸ் மென்பொருள் வாயிலாக உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த குற்றசாட்டு குறித்து விசாரிக்க தொழில்நுட்ப நிபுணர்களை கொண்ட குழு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>