டெல்லியில் சோனியா காந்தி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுடன் ஆலோசனை; தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்பு

டெல்லி: டெல்லியிலுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி அனைத்து மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் மற்றும் தேசிய பொதுச்செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். காலை 10:30 மணியிலிருந்து இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் மாநில பொறுப்பாளர் குண்டுராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

கூட்டம் தொடங்கியவுடன் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென்றும் இதற்கான பணி வரும் நவ.1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உறுப்பினர் தேர்ச்சி என்பது ஒவ்வொரு கிராமங்கள் தோறும் முழுமையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தன்னுடைய தொடக்க உரையின்போது ஒன்றிய அரசை கடுமையாக சாடியிருக்கும் சோனியா காந்தி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் கொடுஞ்செயல் பிரச்சாரத்தை நாம் கருத்தியல் ரீதியாக எதிர்த்து போராட வேண்டுமெனவும் அதே நேரத்தில் கட்சியின் தலைமை சார்பில் வெளியிடக்கூடிய அறிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டங்கள் வாரியாக கொண்டு செல்ல வேண்டுமென்பது நம்முடைய முதன்மையான பணி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வரக்கூடிய உத்திரபிரதேசம், கோவா, உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை

தேர்தலில் முழுமையான வெற்றியை பெற வேண்டுமெனவும் மற்றும் தேர்தலுக்காக முழுமையாக தயாராக வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு மாநிலத்தின் அரசியல் சூழல் மற்றும் தற்போதய கூட்டணி குறித்து விரிவாக மாநில தலைவர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் சோனியா காந்தியிடம் எடுத்துரைத்தனர்.

தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட கே.எஸ். அழகிரி அவர்களும் தற்போதைய சூழல் குறித்தும் ஏற்கனவே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்தும் சோனியா காந்திக்கு விளக்கமளித்தார். அதே நேரத்தில் புதிய உறுப்பினர்  சேர்க்கையை ஒவ்வொரு மாநிலத்திலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டுமென்று சோனியா காந்தி கூறியுள்ளார்.

Related Stories: