நன்னிலம் சர்க்கரை குளத்தில் 47 ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்-வருவாய்த்துறையினர் அதிரடி

நன்னிலம் : நன்னிலம் சர்க்கரை குளதடதிருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சிக்குட்பட்ட, சர்க்கரை குளம், 4 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குளம் பொதுமக்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பாக குடிநீர் தேவைக்காக, பயன்படுத்தப்பட்ட குளமாகும். குளக்கரையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயக் கூலித் தொழிலாளிகள், தற்காலிகமாக குடிசை அமைத்து, வசிக்க தொடங்கினர்.

பின்னர் காலப்போக்கில், நிரந்தரமான குடிசை அமைத்து, தங்களின் நிரந்தர குடியிருப்பாக மாற்றிக் கொண்டனர். ஏறக்குறைய மூன்று தலைமுறையாக, 45 ஆண்டுகளுக்கும் மேலாக, மேற்கண்ட குளக்கரையில், 45க்கும் மேற்பட்ட குடும்பங்கள், குடிசை வீடு அமைத்து, வசித்து வருகின்றனர். இந்நிலையில் 2017ம் ஆண்டு, ஓய்வு பெற்ற அஞ்சலக அலுவலரும், சமூக ஆர்வலருமான, கந்தசாமி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், நன்னிலம் பகுதிகளில் உள்ள குளம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற நீர்நிலைகளை முறையாக பராமரிக்கப்பட வேண்டும். என வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் 2019ம் ஆண்டு, குளம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில், உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறையினர், பேரூராட்சி நிர்வாகம், பல்வேறு தொடர் நடவடிக்கையில், ஈடுபட்டு வந்தனர். மேலும் கொரோனா பேரிடர் காலத்தில், பணி தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு, அமுல் படுத்துவதை, நீதிமன்ற அவமதிப்பாக, கருதி, உடன் ஆக்கிரமிப்புகளை, அகற்ற , நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், குளக்கரை ஆக்கிரமிப்பு குடியிருப்பு வாசிகளுக்கு, ஆக்ரமிப்பு குடியிருப்புகளை உடன் அகற்ற வேண்டுமென நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் சர்க்கரை குளத்தில் இருக்கக்கூடிய, ஆக்கிரமிப்பு குடியிருப்பு வாசிகளுக்கு, சர்க்கரை குளத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவிலுள்ள பருத்தி திடலில், இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பொது மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர கூறினர்.

இந்நிலையில் வருவாய்த்துறையினர், பேரூராட்சி நிர்வாகம், தீயணைப்புத்துறை, மின்சார வாரிய துறை காவல்துறையினர், நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள், காலை 7 மணி அளவில், சர்க்கரை குளத்தை முற்றுகையிட்டு, ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தை துண்டித்தனர், பின்னர் பொருத்தப்பட்ட மீட்டர் பாக்ஸ் அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடிநீர் குழாய்கள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

பின்னர் தாசில்தார் பானுமதி, இன்ஸ்பெக்டர் சுகுணா, வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் தலைமையிடத்து துணை தாசில்தார், காவல்துறை உதவி ஆய்வாளர் கள் மின்சார வாரிய உதவி பொறியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை அலுவலர்கள் முன்னிலையில் 3 பொக்லைன் எந்திரங்கள் கொண்டு 47 ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டன. அதே போன்று அப்பன் குளம், ரெட்டை குளம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன இதனால் நன்னிலம் பகுதியில் பெரும் பரபரப்பு, பதட்டமும் காணப்பட்டது.

Related Stories:

More
>