பெரியகுளம் பகுதியில் தொடர் மழையால் நிரம்பும் நீர்நிலைகள்-விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் தொடர் மழையால் குளங்கள், கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், கும்பக்கரை, கல்லாறு, செலும்பாறு உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஆறுகளில் வரும் மழைநீரை பெரியகுளம் பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் கண்மாய்களில் தேக்கும் பணியை பெரியகுளம் பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெரியகுளம் பகுதியில் உள்ள உருட்டிகுளம் சின்ன பூலாங்குளம், ஆண்டிகுளம், வீரப்பநாயக்கன்குளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குளங்கள், கண்மாய்களில் நீர் நிறைந்து மறுகால் பாய்கிறது. பெரியகுளம் பகுதியில் வடகிழக்கு பருவ மழை துவங்கி பெய்வதற்கு முன்பே, இந்தாண்டு தொடர் மழையால் குளங்கள் மற்றும் கண்மாய்களில் நீர் நிறைந்து மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

More
>