மழையால் சேதமடைந்த கம்பம்மெட்டு சாலை-சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

கம்பம் :  மழையால் கம்பம்மெட்டுக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க வாகன ஓட்டிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பத்திலிருந்து கேரளாவில் உள்ள கட்டப்பனை, நெடுங்கண்டம் பகுதிகளை இணைக்கும் சாலையாக கம்பம்மெட்டு மலைச்சாலை உள்ளது. 13 கி.மீ தூரமுள்ள இந்த சாலையில் பல்வேறு வளைவுகள் உள்ளன. இந்த சாலை வழியாக கேரளாவிலிருந்து கம்பத்துக்கும், கம்பத்திலிருந்து கேரளாவுக்கும் தினசரி வாகனங்கள் சென்று வருகின்றன.

அடுத்த மாதம் அய்யப்பன் கோயில் சீஷன் தொடங்குவதால், அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் இந்த சாலை வழியாக திருப்பி விடப்படும். இந்நிலையில், கம்பம்மெட்டு ரோட்டில் 16வது கொண்டை ஊசி வளைவு சாலையில் தொடர் மழையால் அரிப்பு ஏற்பட்டு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: