பழவூரில் ரூ.1 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம்-பணிகள் விரைவில் துவங்குமென தகவல்

பணகுடி :  பழவூரில் ரூ.1 கோடியில் நவீன ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணிகள் விரைவில் துவங்குமென தகவல் வெளியாகி உள்ளது.

பழவூரில் 1972ம் ஆண்டு முதல் வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இம்மைய கட்டிடத்தில் பராமரிப்பு உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படாததால் கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் காட்சியளிக்கிறது.

இந்த கட்டிடத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய நவீன கிட்டங்கி, அலுவலகம் மற்றும் குடியிருப்புடன் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென கிராம முன்னேற்ற நலச்சங்க தலைவர் இசக்கியப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள், தமிழக சபாநாயகர் அப்பாவு, ஞானதிரவியம் எம்பி ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து சபாநாயகரும், எம்பியும் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து இத்திட்டத்திற்கான மதிப்பீடு தயாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ரூ.1 கோடி மதிப்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக புதிய நவீன ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணிகள் தொடங்க பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கிட அரசு தரப்பில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: