குறைதீர் கூட்டத்தில் 285 மனுக்கள் குவிந்தது

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 285 மனுக்கள் பெறப்பட்டது.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 285 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட டிஆர்ஓ, பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கிஅவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மரகதவள்ளி, நகராட்சி கமிஷனர்கள், தாசில்தார்கள், பிடிஓக்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பெண் தீக்குளிக்க முயற்சி: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று டிஆர்ஓ துர்கா மூர்த்தி தலைமையில் நடந்தது. அப்போது நாமக்கல் பிடில்முத்து தெருவை சேர்ந்த சுப்பிரமணி மனைவி லட்சுமி, கலெக்டர் அலுவலகம் வந்தார். அலுவலக வளாகத்தில் நின்றிருந்த லட்சுமி, திடீரென தனது பையில் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதில் இருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை கவனித்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை காப்பாற்றி நல்லிபாளையம் காவல் நிலையத்துக்கு அனுப்பிவைத்தனர். போலீஸ் விசாரணையில், சொத்து பிரச்னையால் லட்சுமி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. போலீசாரிடம் லட்சுமி கூறுகையில், சொத்தை அபகரித்து தனது தாயை உறவினர்கள் சிலர் வெளியேற்விட்டதாக கூறினார். இதையடுத்து போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: