×

தொடர் உச்சத்தில் தங்கம் விலை!: சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.36,304க்கு விற்பனை...நகை பிரியர்கள் அதிர்ச்சி..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. நாள்தோறும் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. ஒருநாள் குறைவதும், மறுநாளே அதிரடியாக உயர்வதும் தங்கத்தின் வாடிக்கையாகவே உள்ளது. நகை என்பது பெண்களுக்கு பிடித்தமானவை. கொரோனா காலத்தில் தங்கம் விலை கூடினாலும், குறைந்தாலும் அதன் மீதான மோகம் மற்றும் சற்றும் குறையவில்லை என்பதே உண்மை. இந்த அக்டோபர் மாதத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்தும் வந்தது. இடைப்பட்ட காலத்தில் குறைய தொடங்கியிருந்தாலும் அடுத்து வந்த நாட்களில் ஓரளவுக்கு உயர்வை கண்டது.

இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலம் ஒட்டி ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்திருப்பது நகை பிரியர்களை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,538க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.36,304க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20க்கு விற்பனை ஆகிறது.

Tags : Chennai, Jewelery Gold, Shaving, Rs 80 increased to Rs 36,304
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...