×

ஒரே நாளில் 12,428 பேருக்கு தொற்று... 356 பேர் உயிரிழப்பு : இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததா?

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.55 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.42 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 12,428 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,02,202 ஆக உயர்ந்தது.

* புதிதாக 356 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,55,068 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 15,951 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,35,83,318 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,63,816 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் நேற்று மட்டும் 64,75,733 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்..

*தற்போது வரை நாடு முழுவதும் 1,02,94,01,119 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


Tags : India , கொரோனா
× RELATED ஒரே நாளில் 20 ரவுடிகள் கைது