சேத்துப்பட்டில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

சென்னை: சென்னை, சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர், நேற்று இரவு சேத்துப்பட்டு மலையாள கிளப் அருகே நடந்து சென்ற போது அப்பகுதியில் ஒளிந்திருந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி ஓடிவிட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் இளங்கோவன் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து பார்த்துபோது, இளங்கோவன் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.தகவலறிந்து, சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இளங்கோவனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தப்பியோடி மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>