குடிசைப்பகுதி வாழ் இளைஞர்கள் பயனடையும் வகையில் 23 இடங்களில் திறன்மேம்பாட்டு பயிற்சி முகாம்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சமுதாய வளர்ச்சி பிரிவின் மூலம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடிசைப்பகுதி வாழ் இளைஞர்கள் பயனடையும் வகையில் முதற்கட்டமாக 23 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.  இம்முகாம்களில் இளைஞர்கள் தங்கள் கல்வி தகுதிகேற்ப, திறன்மேம்பாட்டு பயிற்சி பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம்.

இவர்களுக்கு 26ம் தேதி (இன்று) செம்மஞ்சேரியிலும், 29ம் தேதி வெங்கடாபுரம் (சின்னமலை அருகில்), பல்லக்குமான்யம் (மயிலாப்பூர் லஸ் கார்னர் பின்புறம்), 30ம் தேதி அகில இந்திய வானொலி திட்டப்பகுதி (திருவொற்றியூர்), செம்மஞ்சேரி, கூடப்பாக்கம் (குச்சிகாடு பேருந்து நிலையம் அருகில்), 2ம் தேதி பெரும்பாக்கம் மற்றும் எழில் நகர், தாண்டவராயன் பிள்ளை சத்திரம் (கோட்டம் - 4  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம்  அருகில்), 6ம் தேதி எழில்நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், 9ம் தேதி புஷ்பா நகர் (லயோலா கல்லூரி அருகில்), வ.உ.சி நகர் (அப்போலோ மருத்துவமனை அருகில்) தண்டையார்பேட்டை, பெரும்பாக்கம் மற்றும் எழில்நகர், எழில்நகர், ஒக்கியம் துரைப்பாக்கம் வியாசர்பாடி டி.டி பிளாக், 10ம் தேதி பெரும்பாக்கம், 11ம் தேதி எழில்நகர் ஒக்கியம் துரைப்பாக்கம், 12ம் தேதி அகில இந்திய வானொலி திட்டப்பகுதி (திருவொற்றியூர்), 12ம் தேதி பெரும்பாக்கம், 13ம் தேதி நாவலூர் (கிருஷ்ணா பொறியியல் கல்லூரி படப்பை), கண்ணகி நகர். 14ம் தேதி வியாசர்பாடி பழைய பிளாக், 15ம் தேதி அத்திப்பட்டு, (அம்பத்தூர்). 16ம் தேதி பெரும்பாக்கத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளன.

Related Stories:

More
>