லேப் டெக்னீஷியன்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள ‘லேப் டெக்னீஷியன்’ நிலை 2 பணியிடங்களை நிரப்பக்கோரி நேற்று சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் டிப்ளமோ லேப் டெக்னீஷியன்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து டிப்ளமோ லேப் டெக்னீஷியன் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.ஜெயபாரதி கூறியதாவது:  தமிழகம் முழுவதும் உள்ள லேப் டெக்னீசியன் நிலை 2 பணியிடங்களை கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும். அதன்படி, ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்து, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும். மேலும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் தோற்றுவிக்கப்பட்ட லேப் டெக்னீஷியன் நிலை 2 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பாமல், காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். அதேபோல் பாரா மெடிக்கல் கவுன்சிலை விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

More
>