10 முதன்மை கல்வி அலுவலர்கள் மாற்றம்: கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை: சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநர் திருவளர்ச் செல்வி, காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலர் ஞானகவுரி -விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுத்து-ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம்-திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா-சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராகவும், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி-நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி- திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலராகவும், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி-கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன்-தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மைய நிர்வாக அலுவலராகவும், சென்னை தொடக்க கல்வி அலுவலக துணை இயக்குநர்(சட்டம்) உஷா- ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>