நாட்டில் மின் பற்றாக்குறை இல்லை: ஒன்றிய மின்துறை அமைச்சர் தகவல்

புதுடெல்லி: `நிலக்கரி இல்லாததால், நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை,’ என்று மின்துறை அமைச்சர் ஆர்கே. சிங் தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தை விற்பனையை தொடங்கி வைத்த மின்துறை அமைச்சர் ஆர்கே. சிங், ``நாட்டில் இனிமேல் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு இல்லை, மின்சாரப் பிரச்னை இருக்காது. நேற்று (நேற்று முன்தினம்) மின் பற்றாக்குறை இல்லை. இதற்கு முன்பும் இதுபோல மின் பற்றாக்குறை இருந்ததில்லை.

இதனை மீறி, மின் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது மாநிலங்கள் அடிப்படையிலானதாக மட்டுமே இருக்கும்,’’ ``கோல் இந்தியா நிறுவனத்துக்கு வர வேண்டிய 16,000 கோடி நிலுவையில் உள்ளது. மாநில மின்துறைகள் தவிர்த்து, அனைத்து மின் உற்பத்தி நிறுவனங்கள் தர வேண்டிய ரூ 75,000 கோடி நிலுவை பாக்கி உள்ளது.  மின்சாரம் இலவசம் அல்ல என்பதை அனைத்து மாநிலங்களும் புரிந்து கொள்ள வேண்டும்,’’ என்று கூறினார்.

Related Stories: