மாநில மக்களுக்கு பரிசு: உ.பியில் 9 மருத்துவ கல்லூரிகள் திறப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

லக்னோ: ‘உ.பியில் 9 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இது மாநில மக்களுக்கு பரிசாக அமைந்துள்ளது’ என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.   உத்தர பிரதேச மாநிலத்தில் 2329 கோடி மதிப்பில்  புதிதாக அமைக்கப்பட்ட  9 மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.  சித்தார்த்தா நகர் பகுதியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு  புதிய மருத்துவ கல்லூரிகளை வீடியோகான்பரன்ஸ் மூலமாக திறந்து வைத்தார்.  சித்தார்த்நகர், இடா, பிரதாப்கர், படேபூர், தியோரியா, கசிப்பூர்,  மிர்சாபூர் மற்றும் ஜான்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் புதிதாக  மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து விழாவில்  பேசிய பிரதமர் மோடி, ஏழைகளுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் செய்து கொடுப்பதற்கு பாஜ ஆட்சி முக்கியத்துவம் அளிக்கிறது. இதற்கு முன்பு உ.பி.யில் இருந்த அரசு 24 மணி நேரமும் ஊழலை செய்து வந்தது. அவர்கள் தங்கள் குடும்பத்துக்காக சம்பாதிப்பதற்கு முக்கியத்துவம் அளித்தார்கள். ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் அனைத்தும் மாறிவிட்டது. மருத்துவ படிப்பு ஏழைகளையும் சென்றடைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரிகள் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என்றார். இதை தொடர்ந்து, 5,200 கோடியில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உட்கட்டமைப்பு திட்டத்தை தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

சிகிச்சைக்கு 10 லட்சம் பிரியங்கா வாக்குறுதி

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சனியன்று காங்கிரஸ் கட்சியின் பிரதிக்யா யாத்திரையை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன் தள்ளுபடி, 20லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட 7 வாக்குறுதிகளை அறிவித்தார். இந்நிலையில் நேற்று மேலும் ஒரு தேர்தல் வாக்குறுதியை அவர் டிவிட்டரில் அறிவித்துள்ளார். பிரியங்கா தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனா காலத்திலும், தற்போது காய்ச்சல் பரவி வரும் சூழலிலும் அரசின் அலட்சியத்தின் காரணமாக உத்தரப்பிரதேச சுகாதார அமைப்பு சீர்குலைந்துள்ளத்தை அனைவரும் பார்க்கிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சிறந்த மற்றும் மலிவான சிகிச்சையை உறுதி செய்யும் வகையில், எந்த வகையான நோய்க்கும் 10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.

Related Stories: