தெலங்கானா-சட்டீஸ்கர் எல்லையில் துப்பாக்கி சூடு 3 மாவோயிஸ்ட் பலி

ஐதராபாத்: தெலங்கானா-சட்டீஸ்கர் எல்லையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெலங்கானாவின் முலுகு மாவட்டம், சட்டீஸ்கர் மாநிலத்தின் பிஜாபூர் எல்லை பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சட்டீஸ்கர் மாநில போலீஸ், சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

அப்போது தெலங்கானாவின் முலுகு மாவட்டம் அருகே நடந்த தேடுதல் வேட்டையின் போது பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்களும் திருப்பி பதில் தாக்குதல் நடத்தினர். இதில், 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த ஏகே-47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories:

More
>