தேவரியம்பாக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்த மக்கள் முன்வர வேண்டும்: ஊராட்சி தலைவர் வேண்டுகோள்

வாலாஜாபாத்: தேவரியம்பாக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று ஊராட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சி தோண்டாங்குளம் கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு, கிராம மக்கள் சார்பில் கிராம வளர்ச்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. சேஷாத்ரி தலைமை தாங்கினார்.

இதில் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார், துணைத்தலைவர் கோவிந்தராஜன் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.  தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற அஜய்குமார், கிராம மக்களிடம் பேசுகையில், ஊராட்சிக்கான சாலை, மழைநீர் வடிகால்வாய், தெரு விளக்கு, குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் உள்பட அனைத்து பணிகளுக்காகவும் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம். மேலும் கிராம மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை அவசியம் செலுத்தி கொள்ள வேண்டும். அவ்வாறு செலுத்தி 100% ஊசி செலுத்தப்பட்ட கிராமம் என மாவட்ட நிர்வாகம் பாராட்டும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.

தோண்டாங்குளம் வரை இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய தொழில் சார்ந்த பெண்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>