வீட்டை உடைத்து கொள்ளை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே,  வீட்டை உடைத்து 7 சவரன், 20 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். உத்திரமேரூர் அருகே எடமச்சி கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். ஆடுகள் வளர்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி. பத்மநாபன் நேற்று காலை தனது ஆடுகளை சாலவாக்கம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். சுமதி வீட்டை பூட்டி கொண்டு, 100 நாள் வேலைக்கு சென்றார். மதியம் 12 மணியளவில் பத்மநாபன் வீடு திரும்பியபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து, அதில் இருந்த 7 சவரன் நகைகள், 20 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>