திருத்தணி கோயிலில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி உள்பட பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். மலைக்கோயில் பகுதியில் கோயில் சார்பில் கட்டப்பட்டுள்ள கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலம் எடுத்த கடைகளில் பூ, தேங்காய், பிரசாதங்கள் சிற்றுண்டி, டீக்கடை மற்றும் பொம்மை விற்பனை செய்யப்படுகிறது.  இந்நிலையில், கோயிலுக்கு செல்லும் சாலை, நிழற்குடையில் பழக்கடைகள், மோர் உள்ளிட்ட பல்வேறு கடைகளை வைத்து பக்தர்கள் செல்ல முடியாத அளவிற்கு வியாபாரம் செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது, பக்தர்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றகோரி கோயில் இணை ஆணையர் பரஞ்ஜோதிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஊழியர்கள் நேற்று ஆக்கிரமிப்பாளர்களை அகற்றினர்.

Related Stories:

More
>