சூதாட்டம்; 21 பேர் கைது

திருவள்ளூர்: சோழவரம் ஒன்றியம் விஜயநல்லூர் கிராமத்தில் ஒதுக்குப்புறமாக எவ்விதமான அனுமதியின்றி சட்டவிரோதமாக சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக வடக்கு மண்டல காவல் துறை தலைவர் சந்தோஷ்குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. அவரது உத்தரவின்பேரில் சிறப்பு படையினர் விரைந்து சென்று சோதனை நடத்தியபோது விஜயநல்லூர் கிராமத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் ஒதுக்குபுறமாக தகர தடுப்புகள் வைத்து சிலர் கொட்டகை அமைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.இதையடுத்து, அவர்களை சுற்று வளைத்து அதிரடியாக சோதனை செய்ததில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. உடனே உள்ளே இருந்த இளைஞர்கள் முதல் முதியோர் வரையில் 21 பேரை கைது செய்து 51,250 ரொக்கம் மற்றும் 2 கார்கள் உள்பட 12 வாகனங்களைபறிமுதல் செய்தனர்.

Related Stories:

More
>