காஸ் அடுப்பில் இருந்து தீப்பற்றி பெண் காயம்

ஆவடி: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் சாவடி தெருவைச் சேர்ந்தவர் சரசகோபால்(49). டீக்கடை ஊழியர். இவரது மனைவி சுமதி(40). இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் சுமதி வீட்டில் உள்ள காஸ் அடுப்பில் பால் சுட வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அடுப்பில் இருந்து தீ அவரது துப்பட்டாவில் பற்றி எரிந்தது.

இதில், அவரது கை, கழுத்து, மார்பு ஆகிய இடங்களில் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம்பேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து படுகாயமடைந்த சுமதியை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories:

More
>