ரயில் மோதி விவசாயி பலி

திருவள்ளுர்: திருவள்ளூர் அடுத்த விடையூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஏழுமலை(50). இவர் தினந்தோறும் தனது வயலில் விளைந்த காய்கறிகளை எடுத்துக் கொண்டு ரயில் மூலம் வில்லிவாக்கம் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் அவர் காய்கறிகள் மூட்டையை எடுத்துக் கொண்டு கடம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு சென்றுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், காய்கறி மூட்டைகளை தலையில் தூக்கிக்கொண்டு செல்லும்போது அவர் செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக சென்னையிலிருந்து வேகமாக வந்த சரக்கு ரயில் அவர் மீது மோதியதில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவர் தூக்கி வந்த பாகற்காய் மூட்டைகள் அனைத்தும் தண்டவாளத்தில் சிதறியது. இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>