எஸ்.பி அலுவலக ஊழியரிடம் வழிப்பறி

ஆவடி: பட்டாபிராம் கந்தசாமி 3வது தெருவை சேர்ந்தவர் லோகநாதன்(50). இவர், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளர்.  இந்நிலையில், நேற்று முன்தினம் லோகநாதன் திருவள்ளூரில் ஒரு திருமணத்திற்கு பைக்கில் சென்று விட்டு வரும் வழியில் வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலை, கருணாகரச்சேரி சுரங்கப்பாதை அருகில் பைக்கை நிறுத்தி இயற்கை உபாதை கழித்து கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் லோகநாதனை மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து தப்பினர். புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>