பயணிகளுக்கு நற்செய்தி.! நவம்பர் 1ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி

சென்னை: நவம்பர் 1ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 23 ரயில்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரெயில்களில் பயணிக்க முன்பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் முன்பதிவில்லா 2-ம் வகுப்பு பெட்டிகளில் பயணிக்கவும் முன்பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது. இதனால், அவசர வேலையாக ரெயிலில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் சற்று சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், நவம்பர் 1-ம் தேதி முதல் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

23 ரெயில்களில் முன்பதிவில்லா 2-ம் வகுப்பு ரெயில் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவில்லா ரெயில்பெட்டிகளில் பழைய முறைப்படி முன்பதிவின்றி பயணிக்கலாம். பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்பட உள்ளது. கோவை - நாகர்கோவில் , திருச்சி - திருவனந்தபுரம் இடையேயான ரெயில்களிலும் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வேயின் இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: