6 மாதத்திற்கு பின் திருப்பரங்குன்றம் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு: பக்தர்கள் மகிழ்ச்சி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில், 6 மாதத்திற்கு பின் தங்கத்தேர் புறப்பாடு நேற்று நடந்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தங்கத்தேர் உள்ளது. இந்த தேரின் வடம் பிடித்து இழுத்து  பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், அதற்கான கட்டணத்தை கோயில் நிர்வாகத்திடம் கட்டி ரசீது பெற்று கொண்டு தேரின் வடம் பிடித்து இழுப்பர். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, கடந்த 6 மாதமாக தங்கத்தேர் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கோயில்களில் அனைத்து வழிபாட்டிற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரசின் வழிகாட்டுதல்படி தங்கத்தேர் நேர்த்திக்கடன் நேற்று துவங்கியது. பக்தர்கள் தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 6 மாதத்திற்கு பின் தங்கத்தேர் நேர்த்திக்கடன் செலுத்த அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: