இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க திட்டம்: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்

சென்னை: ஊரக தொழில்துறை அமைச்சர் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய  குடியிருப்புகள் மற்றும் குடிசைப்பகுதி வாழ் இளைஞர்களின் கல்வி தகுதிக்கேற்ப, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு  நிதி (CSR) ஆகியவற்றின் மூலமாக 10,000 இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திறன்மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சமுதாய வளர்ச்சி பிரிவின் மூலம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடிசைப்பகுதி வாழ் இளைஞர்கள் பயனடையும் வகையில் முதற்கட்டமாக 23 இடங்களில் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.   இம்முகாம்களில் இளைஞர்கள் தங்கள் கல்வி தகுதிகேற்ப, திறன்மேம்பாட்டு பயிற்சி பெறுவதற்கு பதிவு செய்துகொள்ளலாம்.  பதிவு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம்,  தனியார் மற்றும்  தொண்டு நிறுவனங்கள்  மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

கீழ்கண்ட பட்டியலின் படி முகாம்கள் நடைபெறவுள்ளன.  இளைஞர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளமாறு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வ.எண்    தேதி    முகாம் நடைபெறும் இடம்

1    26.10.2021    செம்மஞ்சேரி     

2    29.10.2021    வெங்கடாபுரம் (சின்னமலை அருகில்)    

3    29.10.2021    பல்லக்கு மாண்யம் (மயிலாப்பூர் லஸ் கார்னர் பின்புறம்)    

4    30.10.2021    அகில இந்திய வானொலி திட்டப்பகுதி (திருவெற்றியூர்)    

5    30.10.2021    செம்மஞ்சேரி     

6    30.10.2021    கூடப்பாக்கம்(குச்சிகாடு பேருந்து நிலையம் அருகில்)    

7    02.11.2021    பெரும்பாக்கம் மற்றும் எழில் நகர்    

8    02.11.2021    தாண்டவராயன் பிள்ளை சத்திரம் (கோட்டம் - 4  தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம்  அருகில் )    

9    06.11.2021    எழில்நகர், ஒக்கியம் துரைப்பாக்கம்    

10    09.11.2021    புஷ்பா நகர் (லயோலா கல்லூரி அருகில்)    

11    09.11.2021    வ.உ.சி நகர் (அப்போலோ மருத்துவமனை அருகில் ) தண்டையார்பேட்டை    

12    09.11.2021    பெரும்பாக்கம் மற்றும் எழில்நகர்    

13    09.11.2021    எழில்நகர், ஒக்கியம் துரைப்பாக்கம் (துசூசூருசுஆ)    

14    09.11.2021    வியாசர்பாடி டி.டி பிளாக்    

15    10.11.2021    பெரும்பாக்கம்     

16    11.11.2021    எழில்நகர் ஒக்கியம் துரைப்பாக்கம் - (நுகூசுஞ)    

17    12.11.2021    அகில இந்திய வானொலி திட்டப்பகுதி (திருவெற்றியூர்)     

18    12.11.2021    பெரும்பாக்கம்     

19    13.11.2021    நாவலூர்(கிருஷ்ணா பொறியியல் கல்லூரி படப்பை)    

20    13.11.2021    கண்ணகி நகர்    

21    14.11.2021    வியாசர்பாடி பழைய பிளாக்    

22    15.11.2021    அத்திப்பட்டு, (அம்பத்தூர்)    

23    16.11.2021    பெரும்பாக்கம்.

Related Stories:

More
>