வனப்பகுதியில் சிதறிக் கிடந்த ஆண் யானையின் எலும்புகள்; தந்தத்திற்காக கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம்

கோவை: கோவை பூண்டி மலைப்பகுதியில் இறந்து 40 நாட்களான யானையின் எலும்புகள் கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில் தந்தத்திற்காக கொல்லப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள போளுவாம்பட்டி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. தற்போது வலசை காலம் என்பதால் கேரள வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் இங்கு முகாமிட்டுள்ள.

இந்நிலையில் ஜவ்காடு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அங்கு யானை ஒன்றின் எலும்புகள் சிதறிக்கிடந்ததை பார்த்துள்ளனர்.30 வயதுள்ள ஆண் யானை என்று கூறப்படும் யானையின் தந்தங்கள் மாயமாகி இருப்பதால் யானை கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் யானை இறந்து 40 நாட்கள் ஆகியிருக்கலாம் என கூறப்படும் நிலையில் இதனை நாட்கள் வனத்துறையினர் ரோந்து பணியை மேற்கொள்ளவில்லையா என உயிரின ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.                 

Related Stories:

More
>