இந்தியை புறவாசல் வழியாக நுழைக்க முற்படுகிறீர்களா?; தலைமை நீதிபதி சரமாரி கேள்வி

சென்னை: ஒன்றிய அரசு இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கும் கிஷோர் விஞ்ஞான் புரதக்ஷன் யோஜனா என்ற தேர்வினை 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு உள்ளிட்ட மாணவர்கள் எழுதலாம். இந்த தேர்வானது வரும் நவ.7ம் தேதி நடைபெற உள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த தேர்வு அரசியலமைப்பில் பட்டியலிடப்பட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடைபெற வேண்டும் எனவும் அப்பொழுதுதான் கிராமபுற மாணவர்களுக்கும் அறிவியல் ஆர்வத்ததை ஊக்குவிக்க முடியும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் எம். துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும், கிராமப்புறங்களிலும் அந்தந்த மாநில மொழிகளில் படிக்கக்கூடிய மாணவர்களும் அறிவியல் ஆர்வத்துடன் இருப்பார்கள் அவர்களுக்கு ஆங்கிலம் ஒரு தடையாக இருக்க கூடாது, இந்தியர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் பொதுவானது அல்ல அதனால் அனைத்து மாநில மொழிகளிலும் தேர்வு நடைபெற வேண்டும் எனவும் மேலும் இந்தி, ஆங்கிலம் தவிர பிற மாநில மொழிகளிலும் ஏன் தேர்வு நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மேலும் வரும் நவ.7ம் தேதி நடைபெற உள்ள தேர்வை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டனர். மேலும் அனைத்து மாநில மொழிகளிலும் இந்த தேர்வை நடத்துவது குறித்து உரிய பதிலளிக்கவும் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். அறிவியல் ஆர்வம் அதிகமுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் ஒரு தடையாக இருக்க கூடாது எனவும் மேலும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் முன்னிலையில் உள்ள ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் அவர்களின் தாய் மொழியில்தான் கல்வி கற்கின்றனர் எனவும் கிராமப்புற மாணவர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை எனவும் மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டும் தான் முக்கியமான மொழி இதற்க்கு அறிவியல் கலை சொற்களை தமிழில் மொழிபெயர்பதற்கு வல்லுநர்கள் இல்லை எனவும் மேலும் இந்தியை ஏன் புறவாசல் வழியாக நுழைக்க முற்படுகிறீர்களா என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் நவ.7ம் தேதி நடைபெற உள்ள உதவி தொகைக்கான ஒன்றிய அரசின் தேர்வை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: