உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல்; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்; பிரியங்கா காந்தி அறிவிப்பு

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு ரூ.10 லட்சம்  வரை இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

விவசாய கடன் தள்ளுபடி, மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் மற்றும் மின்சார ஸ்கூட்டர் வழங்கப்படும் என ஏற்கனவே பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்திருக்கிறார். அந்த வகையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு ரூ.10 லட்சம் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும் என ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

Related Stories:

More
>