கருவேலம் கட்டுப்பாட்டில் வத்திராயிருப்பு நீர்நிலைகள்-தூர்வார கோரிக்கை

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பகுதிகளில் 10 ஆண்டுகளாக ஏரி, குளம், கண்மாய், நீர்வரத்து ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் முறையாக தூர்வாரி சீரமைக்கப்படாததால், மழைக்காலங்களில் கிடைக்கக்கூடிய மழைநீர் விவசாயத்திற்கு பயன்படாமல் வீணாகி வருகிறது என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வத்திராயிருப்பு பகுதியை சுற்றி மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலைப்பகுதிகளில் மழை பெய்தால் தண்ணீர் மந்தித்தோப்பு, கல்லணை ஆற்றுப்பாலம் வழியாக ஆலங்குளம் உள்ளிட்ட கண்மாய்களுக்கு சென்றடையும். இப்பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியில் இருந்து வரக்கூடிய , கோயிலுக்கு வரக்கூடிய இரண்டு ஓடைகளும் மிகக்குறுகிய அளவாக உள்ளது. அதேபோன்று மந்தித்தோப்பு பகுதியில் உள்ள ஓடைகளையும் வருவாய் வரைபடத்தின் மூலம் நீளம், அகலம் எவ்வளவு உள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த ஓடைகளில் ஆக்கிரமிப்பு இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் உள்ள கருவேலம் மரங்களை அகற்ற வேண்டும். அதோடு கல்லணை ஆற்றுப்பாலத்தில் இருந்து செல்லக்கூடிய கரைகளை பலப்படுத்த வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால், யாரும் கண்டுகொள்ளாததால் மழைநீர் விவசாயத்திற்கு பயன்படாமல் வீணாகி வருகிறது. எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை முறையாக தூர்வாரி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>