விசேஷ நாட்களையொட்டி வாழைத்தார் விலையேற்றம்

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின்   ஒருபகுதியில்,  வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள்  வாழைத்தார் விற்பனை செய்யப்படுகிறது.   இங்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும்  கொண்டு வரப்படும் வாழைத்தார்கள், தரத்திற்கேற்றார் போல் விலை நிர்ணயம்  செய்யப்பட்டு எடை மூலம் விற்பனை செய்யப்படுகிறது.  

இதில்,  கடந்த  மாதம் இறுதியில் வரத்து குறைவாக இருந்தாலும், சுபமுகூர்த்த நாட்கள்  இல்லாததால் வாழைத்தார் விற்பனை மந்தமாக இருந்துள்ளதுடன், குறைவான விலைக்கு  ஏலம்போனது. இந்நிலையில், இந்த வாரம் ஐப்பசி மாதம் துவக்கத்தால்,  அனைத்து  ரக  வாழைத்தார்களுக்கும்  கிராக்கி ஏற்பட்டுள்ளது.  நேற்று நடந்த  ஏலத்தின்போது, சுற்றுவட்டார பகுதியிலிருந்தும், தூத்துக்குடி உள்ளிட்ட வெளி  மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார் வரத்து ஓரளவு இருந்தது.

வரத்து  அதிகமாக இருந்தாலும், இன்று மற்றும் வரும் 27, 28ம் தேதி சுபமுகூர்த்த  விஷேச  நாட்கள் இருப்பதால் அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலைக்கே  நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது. இதில், ஒரு கிலோ ரூ.35க்கு விற்பனையான   செவ்வாழைத்தார் ரூ.38க்கும், பூவந்தார் ரூ.28க்கும், சாம்ராணி  ரூ.28க்கும், மோரீஸ் ரூ.28க்கும், ரஸ்தாளி ரூ.35க்கும், நேந்திரன் ஒருகிலோ  ரூ.36க்கும், கேரள ரஸ்தாளி ஒருகிலோ ரூ.35க்கும் என, கடந்த வாரத்தை விட கூடுதல் விலைக்கு  விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More
>