பழநி அருகே குளத்து தண்ணீரில் வெண்மேகங்கள் போன்று நுரை-கால்நடைகள், மக்களுக்கு நோய் அபாயமா?

பழநி : பழநி அருகே சிறுநாயக்கன்குளத்தில் தண்ணீரில் நுரை வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், பழநி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகள் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு நிரம்பி வருகின்றன. இதன்காரணமாக பழநி அருகே சிறுநாயக்கன்குளம் நிரம்பி உள்ளது. இக்குளம் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இக்குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீருடன் நுரை மெண்மேகங்கள் போல் திரண்டு நிற்கின்றன.

சிறுநாயக்கன் குளத்தில் இருந்து பாப்பா குளத்திற்கு மறுகால் பாயும் இடம் முழுவதும் நுரைகள் திரண்டு நிற்கின்றன. இவ்வாறு நுரையுடன் வரும் நீரை கால்நடைகள் அருந்துவது, விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் ேநாய்கள் ஏதும் வந்து விடுமோ என விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சமடைந்துள்ளனர். தண்ணீரில் நுரை வருவதற்கான காரணத்தை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>